 |
அதிக விசை கொடுத்து
மவுஸ்சை பிடிக்காதீர்கள்.. |
 |
நேரடி வெளிச்சத்தில்
அமர்ந்து பணிபுரிவதை தவிர்க்கவும்.. |
 |
தோள்களை இலகுவாக
வைத்திருக்கவும், கைமூட்டுக்களை இலகுவாக, நேராகவும்
வைத்திருக்கவும். |
 |
மணிக்கட்டுக்களை நீட்டி
நேராகவும் மேசைக்கு இணையாகவும் வைக்கவும். |
 |
உங்கள் பர்வை மட்டத்தில்
கொஞ்சம் கீழே இருக்குமாறு திரையை அமைக்கவும். |
 |
கழுத்தை கொஞசம்
தாழ்த்தியே வைத்திருக்கவும், தலையை முன்னோக்கி நீட்டி
இருக்கக்கூடாது. |
 |
உங்கள் கண்களுக்கும்
திரைக்கும் இடையே 60 சென்ரி மீட்ரர் இடைவெளியிருக்க வேண்டும். |
 |
ஒவ்வொரு முக்கால் மணி
நேரத்திற்கொரு முறை திரையிலிருந்து
பார்வையை விலக்கி ஒரு
வெற்று இடத்தை கொஞ்சம் நேரம் பார்க்கவும். |
 |
முதுகினை எப்பொதும்
இருக்கையில் சாய்ந்திருக்குமாறு அமரவும். |
 |
கால் பாதங்கள்
தரையில்படும்படி இருக்கவும் |
 |
கொஞ்ச நேரத்திற்கு ஒரு
முறை உட்கார்ந்திருக்கும் நிலையை மாற்றவும். |
 |
இரண்டு மணி
நேரத்திற்குகொரு முறை சிறிது உலாவி வரலாம் காரியாலையத்தில்
வேலை பார்ப்பவர்கள் வேறு எதாவது வேலைகளை பார்க்கலாம். |
 |
திரை
: ஆன்டிகிளேர்
திரைகள் திரையிலிருந்து வரும் கதிர்கள் நம் கண்களை
பாதுகாக்கின்றது |
 |
கீபோர்ட் பாவிக்கும்
போது மணிக்கட்டை
ஓய்வாகவைத்திருக்கவும். கீபோர்ட்
பட்டன்களை மெதுவாக அழுத்தவும். அச்சு தட்டில் தூசிகள்
படியாது வண்ணம் பாதுகாத்துக்கொள்ளவும். |
 |
மவுஸ் உள்ளங்கையின் பெரும்
பகுதியை ஆக்கிரமிக்காதவாறு சிறிய மவுஸ்களை வாங்கவும்.
ஸ்க்ரோலிங் பட்டன் உள்ள மவுஸ் வாங்குவது சிறந்தது. |
 |
இருக்கை, மேசைகள்: மலிவாக
கிடைக்கின்றது என்பதற்காக முறையற்ற கதிரை, மேசைகளை வாங்காது.
முதுகுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டவைகளை வாங்கவும். |