|
கண்ணில்
கோளாறு வராமல் இருக்க நீங்கள்
கடைப்பிடிக்க வேண்டியவழி முறைகள் சில:
*
ஒவ்வொரு ஆண்டும் கண் டாக்டரிடம் கண்களை
பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
கான்டாக்லென்ஸ் (Contact lens)போட்டிருந்தால்
ஆறு மாதத்திற்கு ஒரு முறை பரிசோதியுங்கள்
*
மின்கணனி உபயோகிப்பவர்களுக்கு கண்
மடடுமல்ல, கழுத்து , இடுப்பு, முதுகு,
கைகள் போன்ற இடங்களில் வலி ஏற்படடுவது
சகஜம். நேராக அமர்ந்து கைகளை தளர்ந்த
நிலையில் வைத்திருக்கவேண்டிய அவசியத்தை
உணர்ந்திருப்பீர்கள்.
*
இரண்டு மணிரேம் தொடர்ந்து
கணிப்பொறியின் திரையில்
பார்த்துக்கொண்டிருந்தால் 15 நிமிடம்
ஓய்வெடுங்கள். வேறு ஏதாவது வேலை செய்யலாம்.
*
கண்களைத் திறந்தாற்போல் நீண்ட நேரம்
வைத்திருக்காதீர்கள் மூடித் திறவுங்கள்.
திரையில் ஓடிக்கொண்டிருப்பதை தவறவிட்டு
விடுவீர்கள் என்ற நினைப்பில் இமைக்காமல்
பார்ப்பது பலருடைய பழக்கம்.
அப்படிப்பார்த்தால் கண்ணில் ஆரம் வற்றி
விடுகிறது. கண்கள் சீக்கிரமாக
களைப்படைந்து விடுகின்றன. தினமும்
eye drope போட்டுக் கொள்ளுங்கள்.
* வேலை செய்யாத நேரங்களில்
கண்ணிற்கு நிறையப்பயிற்சி கொடுங்கள் மிகத்
தொலைவிலுள்ள பொருட்களை உற்று
நோக்குங்கள். உடனே மிக அருகாமையில்லுள்ள
கைக்கடிகாரத்தில் நேரத்தைப்பாருங்கள்.
இப்படி தூரப்பார்வை, கிட்டப்பார்வை
இரண்டையும் பயன்படுத்துங்கள்.
* உங்க்ள் மின்கணனி அறையின்
வெளிச்சம், மின்கணனித் திரையைவிட மூன்று
நான்கு மடங்கு அதிகமாக இருக்கவேண்டும்
திரையி்ல் பின்னணியைவிட எழுத்துக்கள்
பளிச்சென்று இருக்க வேண்டும்.
* உங்கள் வேலை முடிந்தபின்
மின்கணனியின் மின்னினைப்பு துண்டித்தபின்
(0ff) அதன்மீது ரியூப்லைட் அல்லது ஐன்னல்
வெளிச்சம் விழுகிறதா என்று பாருங்கள்
இருந்தால் அதைத் தவிர்த்து விடுங்கள்.
* மின்கணனியின் திரையை
அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். திரை உங்கள்
கண்ணுக்கு நேராக இருக்கக்கூடாது. பார்வையை
கீழ்ச்செலுத்தி , திரை தெரிகிறமாதிரி
கொஞ்சம் உயரமாக உட்காருங்கள்.
* திரைக்கும் கண்களுக்கும்
18 அங்குல இடைவெளி அவசியம் நீங்கள் type
செய்யும் பிரதி, திரையின் அதே உயரத்தில்
கண்ணிலிருந்து 18 அங்குல தொலைவில்
வையுங்கள் இப்படி வைத்தால் கழுத்து அசைவை
இது குறைக்கும்.
*
மின்கணனியிலிருந்து வெளிவரும்
Electromagnrtic radiation னும், அதைவிட
கெடுதலான Ioizing ரேடியேஷனும் கருவுற்ற
பெண்களைப் பாதிக்கும். எனவே மூன்று
மாதங்கள் மின்கணனியிலிருந்து
விலகியிருங்கள். |